Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பி.பி.ஆர். குடியிருப்பாளர்களின் வாடகை நிலுவையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்குவீர்
தற்போதைய செய்திகள்

பி.பி.ஆர். குடியிருப்பாளர்களின் வாடகை நிலுவையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்குவீர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-

கோலாலம்பூர் பி.பி.ஆர். குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், நிலுவையில் உள்ள தங்கள் வீட்டு வாடகைப் பணத்தை அவர்கள் தவணை முறையில் செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதே வேளையில் அவர்களின் வீடுகளில் துண்டிக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் மீண்டும் திறந்து விடப்பட வேண்டும் என்று கோரி மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசு பிரதேசத்திற்குப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹா முஸ்தாபா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷரிப் ஆகியோரிடம் மகஜர் ஒப்டைக்கப்பட்டது.

கூட்டரசு பிரதேச பி.பி.பி. கட்சி, அதன் சிலாங்கூர் மாநிலம் மற்றும் அரசாங்க சார்ப்பற்ற அமைப்பு ஆகியவை இணைந்து அவற்றின் பொறுப்பாளர்கள் இன்று பிற்பகலில் கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள மாநகர் மன்ற அலுவலகத்தில் இந்த மகஜரை ஒப்படைத்தனர்.

Related News