Sep 27, 2026
Thisaigal NewsYouTube
1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் ஓசன் தண்டர் கப்பல் மலேசியாவை வந்தடைந்ததது
தற்போதைய செய்திகள்

1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் ஓசன் தண்டர் கப்பல் மலேசியாவை வந்தடைந்ததது

Share:

ஹார்முஸ் நீரிணையிலிருந்து பயணித்து வரும், மலேசியாவிற்குச் சொந்தமான ஏழு கப்பல்களில், ஓஷன் தண்டர் என்ற கப்பல், ஈராக்கின் பஸ்ரா நகரிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் மலேசியாவை வந்தடைந்துள்ளது.

இந்த கச்சா எண்ணெய்கள் தனது விரிவான விநியோக வலையமைப்பின் ஒரு பகுதியாகவும், நாட்டின் எரிபொருள் விநியோகம் நிலையாக இருக்க மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாக இருப்பதாகவும் பெட்ரோனாஸ் நிறுவனம் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த 1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யானது, சுமார் 159 மில்லியன் லிட்டருக்கு சமமானது என்றும், இதனை சுத்திகரிக்க சுமார் 6 நாட்கள் ஆகும் என்றும் பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.

இந்த சுத்திகரிப்பின் மூலம், மில்லியன் கணக்கில், டீசல், பெட்ரோல், விமான எரிபொருள், எல்பிஜி எரிவாயு உள்ளிட்டவைகள் கிடைக்கும் என்பதால், நாட்டின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்