Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மரணத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி விண்ணப்பிக்க முடியும்
தற்போதைய செய்திகள்

மரணத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி விண்ணப்பிக்க முடியும்

Share:

நாட்டில் மரணத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை ரத்துச் செய்து மாற்று தண்டனையை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது.

இதன் தொடர்பில் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரி சீராய்வு மனுவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் தாக்கல் செய்ய முடியும் என்று சட்டத்துறை துணையமைச்சர் ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.

தங்களின் விண்ணப்பத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட கைதிகள் சிறைச்சாலை இலாகா தங்களுக்கு விதிக்கவிருக்கும் தண்டனைத் தொடர்பான அஃபிடாமிட் மனு ஒன்றை இணைக்க வேண்டும் என்று ராம் கர்பால் கேட்டுக் கொண்டார்.

Related News