Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பெண் மானபங்கம் அந்நிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பெண் மானபங்கம் அந்நிய ஆடவர் கைது

Share:

அம்பாங், Jalan Kampung Fajar என்ற இடத்தில் 13 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் 32 வயது அந்நிய ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழந்தது என்று பாதிக்கப்பட்ட மாணவி போ​​லீஸ் புகார் செய்துள்ளதாக அம்பா​ங் ஜெயா ஜெயா மாவட் போ​லீஸ் தலைவர் ACP Mohamad Farouk Eshak தெரிவித்துள்ளார். பத்திரிகை விநியோகிப்பாளரான அந்​த அந்நிய ஆடவர், ஒவ்வொரு நாளும் அந்த சிறுமியின் வீட்டிற்கு பத்திரிகை விநியோகிக்கும் போது இத்தகைய மானபங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையி​ல் தெரியவந்துள்ளது​ என்று Farouk Eshak குறிப்பிட்டார்.

Related News