Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பாடத் திட்டத்தை முடிக்க ஆசிரியர்களுக்குப் போதுமான நேரம் இல்லையா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாடத் திட்டத்தை முடிக்க ஆசிரியர்களுக்குப் போதுமான நேரம் இல்லையா?

கோலாலம்பூர், ஜூன்.17-

கால வரைக்குள் பாடத் திட்டத்தை போதித்து முடிக்க ஆசிரியர்களுக்கு போதுமான நேரம் இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்யுடிபி மறுத்துள்ளது.

அதே வேளையில் ஒவ்வோர் ஆண்டும் பள்ளி நாட்களின் மொத்த எண்ணிக்கை சீராக இருக்க வேண்டும் என்று என்யுடிபி வலியுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நாட்காட்டியின் அடிப்படையில் பள்ளிகள் இயங்குகின்றன. ஆண்டுக்குக் குறைந்தது 190 பள்ளி நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்திற்குள் பாடத் திட்டங்கள் முறையாகப் போதிக்கப்பட்டு முடிக்கப்படுகின்றன என்று என்யுடிபியின் பொதுச் செயலாளர் ஃபோவ்ஸி சிஙொன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்தையும் நடத்துவதற்கு ஆசிரியர்கள், நிர்வாக உதவியாளர்கள், இலாகா தலைவர்கள் உள்ளனர். எனவே நேரப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் விளக்கினார்.

ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் அடைவு நிலையை உறுதிச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைக் கல்வி அமைச்சு, மாநில கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் இணைப்பாடத் திட்டங்களைத் திட்டமிட்டு, பள்ளிகளுக்கு வழங்குகின்றன என்பதையும் ஃபோவ்ஸி சிஙோன் தெளிவுபடுத்தினார்.

2025/ 2026 கல்வியாண்டு அரையாண்டைக் கடந்து விட்ட நிலையில் நேரப் பற்றாக்குறையினால் பாடத் திட்டத்தின் பெரும்பகுதியைப் போதிக்க முடியாமல் ஆசிரியர்கள் தடுமாறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் என்யுடிபி விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →