Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியது Karnival Cha Ching
தற்போதைய செய்திகள்

சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியது Karnival Cha Ching

Share:

பணத்தை சம்பாதிப்பது, சேமிப்பது, செலவளிப்பது, நன்கொடை வழங்குவது ஆகிய அடிப்படை நிதி கோட்பாடுகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் Karnival Cha Ching -யின் நிகழ்வு அண்மையில் கிள்ளானில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தலைமையிலான சேவை மையத்தின் கல்வி பிரிவைச் சேர்ந்த 50 தொண்டூழியர்களின் வழிகாட்டலுடன் நடைபெற்ற இந்த Karnival Cha Ching நிகழ்வில் கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 5 தொடக்கப்பள்ளியிலிருந்து 700 மாணவர்கள் பங்கு கொண்டனர்.

கேளிக்கை நிகழ்வுகளின் வாயிலாக மிக கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்த கர்னிவல் நிகழ்வில் மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்து சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பலதரப்பட்ட பயனான தகவல்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Prudential Assurance Malaysia Berhad மற்றும் Prudence அரவாரியத்தின் ஏற்பாட்டில் தங்களின் நிறுவன கடப்பாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வானது மலேசிய சிறார்கள் மற்றும் பெரியோர்களுக்கு நிதி வளம் தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் நிகழ்ச்சியாக நடந்தேறியது.

இந்நிகழ்வில் பங்கு கொண்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் Prudential Assurance Malaysia Berhad -டின் நிறுவனத்தின், நிறுவன கடப்பாட்டுப் பிரிவின் தலைவர் ஜெஃப்ரி லாம் கீழ்கண்டவர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Mr. Ooi Yeong Wen, Headmaster of SJK(C) Perempuan Klang, En. Mohd Jazid Bin Iman, Headmaster of SK Klang Jaya, Mr. Thamilarasu A/L Subramaniam, Headmaster of SJK(T) Sentosa, Mr Selvanathan Headmaster of SJKT Simpang Lima, SJKT Bt Ampat and Dr. Uma Rani Ramakrishnan, Special Officer DUN Sentosa.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை