பாசீர் மாஸ், ஆகஸ்ட்.25-
மாணவர் ஒருவரைப் பகடிவதை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணர்கள், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நான்காம் படிவத்தைச் சேர்ந்த அந்த 6 மாணவர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தின் அடுத்தக் கட்ட உத்தவுக்காக போலீஸ் துறை காத்திருப்பதாக கிளந்தான், பாசீர் மாஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் காமா அஸுரால் முகமட் தெரிவித்துள்ளார்.








