Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மலேசியரைக் கரம் பிடிக்கும் அந்நியருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு PR அந்தஸ்தை வழங்குவீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.27-

மலேசியரை தங்களின் வாழ்க்கைத் துணையாக கரம் பிடிக்கும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர வசிப்பிட அந்தஸ்தான PR தகுதியை இயல்பாகவே வழங்க வேண்டும் என்று அரசு சாரா இயக்கம் ஒன்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐந்து ஆண்டுகள் என்பது மலேசியரும், அந்நிய நாட்டவரும் இல்லறத்தில் இணைந்ததற்கும், அவர்களுக்கு இடையிலான தாம்பத்திய வாழ்க்கையின் நல்லிணக்கத்திற்கும் போதுமான காலக்கெடுவாகும். இந்த 5 ஆண்டுகளைக் கடக்கும் மலேசியரை மணந்துள்ள ஓர் ஆண் அல்லது பெண் இயல்பாகவே மலேசிய நிரந்தர அந்தஸ்தை பெறுவதற்கு தகுதியுடையவர் என்ற ஓர் அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அந்நிய இணையருக்கான ஆதரவு குழு ஒன்று இன்று வலியுறுத்தியுள்ளது.

மலேசியரை திருமணம் செய்து கொண்ட அந்நிய நாட்டவர் பலர், PR அந்தஸ்து கோரி, செய்து கொண்ட பல விண்ணப்பங்கள் தேசிய பதிவு இலாகாவினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்த இந்த ஐந்து ஆண்டு கால அவகாசாத்தை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு