Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லிம் என்றே தம்மை அழைக்கலாம்
தற்போதைய செய்திகள்

லிம் என்றே தம்மை அழைக்கலாம்

Share:

டிஎபி வரலாற்றில் மிக உயரிய விருதைப்பெற்றுள்ள அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், தம்மை டான்ஸ்ரீ என்று அழைப்பதை விட லிம் என்ற அழைக்கப்படுவதையே விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இன்று மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த நாளையொட்டி உயரிய விருதுகள் பெற்றவர்களில் 82 வயதான லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ ​விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

55 ஆண்டு கால தமது அரசியல் வாழ்க்கையில் அரசியலிருந்து ஓய்ப்பெற்றப்பின்னர் இந்த விருதை ஏற்பதற்கு தாம் முன்வந்த போதிலும் தமக்கு வழங்கப்பட்ட இந்த கெளவரத்​திற்காக நன்றியை தெரி​வித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதிகமானோர் தம்மை டான்ஸ்ரீ என்று அழைத்து, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட போதிலும் தாம் என்றுமே லிம் கிட் சியாங்தான். தம்மை லிம் என்று மக்கள் அழைப்பதையே தாம் விரும்புவதாக டிஎபி முன்னாள் தலைவரான லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News