Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சித்ரவதைக்கு ஆளான சிறுமி உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சித்ரவதைக்கு ஆளான சிறுமி உயிரிழந்தார்

மலாக்கா, ஜூன்.23

சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் ஒன்பது வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக மாண்டார்.

கால் முறிந்து, தலையில் பலத்தக் காயங்களுக்கு ஆளான அந்த சிறுமியின் மரணம் குறித்து இன்று காலை 10.15 மணியளவில் மருத்துவரிடமிருந்து அவசர அழைப்பைப் போலீசார் பெற்றதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

உடலில் கடும் காயங்களுடன், சுயநினைவின்றி வளர்ப்பு பெற்றோரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி காலை 9.45 மணியளவில் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →