தற்போது ஒரு பேய் நகரைப் போன்று மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான பகாங், பிரேசர் மலையை மேம்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ரவூப், பக்காத்தான் ஹராப்பான் எம்.பி. சொவ் யு ஹுய் கேட்டுக்கொண்டார்.
குட்டி இங்கிலாந்து என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்ட்ட பிரேசர்மலையை மேம்படுத்தப்படுவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் தற்போது சுற்றுப்பயணிகள் வெகுவாக குறைந்து விட்டதாக சொவ் ஹுய் யி இன்று மக்களவையில் தெரிவித்தார்.
அந்த சுற்றுலா மலைவாசல் தலத்தில் அடிக்கடி நிகழும் நிலச்சரிவு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.








