Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தாயைக் கொலை செய்த வழக்கில் மனநலக் குறைபாடு கொண்ட ஆடவர் விடுதலை
தற்போதைய செய்திகள்

தாயைக் கொலை செய்த வழக்கில் மனநலக் குறைபாடு கொண்ட ஆடவர் விடுதலை

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரெலாவ் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், தனது தாயாரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான சூன் யோங் ஆன் என்பவரை, ஜார்ஜ் டவுன் உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

அவர் முன்வைத்த, 'மனநலக் குறைபாடு' சார்ந்த தற்காப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு, ஜூன் 15-ஆம் தேதி, மாலை 5.47 மணியளவில், லெபு ரெலாவ்விலுள்ள, 'தாமான் அலோர் விஸ்தா' குடியிருப்பு வளாகத்தில், 67 வயதான சுவா ஆ டிங் என்பவரை சூன் கொலை செய்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.

அதன் படி, சூன் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 302-இன் கீழ், கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இக்குற்றத்திற்கு மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் குறைந்தது 12 பிரம்படிகளோ தண்டனையாக விதிக்கப்படலாம்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு