கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
முறையான பயண ஆவணமின்றி மலேசியாவில் தங்கியிருந்த அந்நிய நாட்டவர்கள் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர், கடந்த 6 மாதக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
28,525 பேர் 1959 ஆம் ஆண்டு மலேசிய குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களில் 74 விழுக்காட்டினர் அல்லது 21 ஆயிரத்து 039 பேர் பெரியவர்கள் ஆவார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.








