Jul 6, 2026
Thisaigal NewsYouTube
அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விலக்கு இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்யும்
தற்போதைய செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விலக்கு இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்யும்

Share:

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அரிசி, சமையல் எண்ணெய், காய்கறிகள், கோழி, மீன் முதலிய அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படாமல் நிலை நிறுத்தப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே 5 அல்லது 10 விழுக்காடு வரி விதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது. அதனை அரசாங்கம் எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

மக்களின் நல்வாழ்வை உறுதிச் செய்வதற்கு அவர்களுக்குச் சிரமத்தைத் தர வல்ல எந்த செயலிலும் மடானி அரசாங்கம் ஈடுபடாது என்று முகமட் சாபு உறுதி கூறினார்.

Related News