Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு

Share:

சிங்கப்பூரில் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் வேலைக்கு மாதம் 13,000 மலேசிய ரிங்கிட் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், அதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் வெளியான விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடிப்படைச் சம்பளம் சுமார் 11,000 ரிங்கிட் முதல் மேலதிக நேர வேலைப்பளுவுடன் 13,000 ரிங்கிட் வரை வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சுத்தம் செய்ய எதற்குப் பட்டப்படிப்பு?" என்று பலர் சமூக ஊடகங்களில் கேலி செய்து வரும் நிலையில், இதன் பின்னணியில் அந்நாட்டின் தொழிலாளர் கொள்கை இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் விதிமுறைப்படி, பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவது நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மற்றும் ஒதுக்கீட்டு அடிப்படையில் சாதகமாக இருப்பதால், இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

Related News