தாசெக் குளுகோர், ஜூலை.17-
பினாங்கு, தாசெக் குளுகோரில் ஆடவர் ஒருவர் காருக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Taman Area Mut என்ற இடத்தில் உள்ள கடை வரிசைக்கு பின்னால் நிறுத்தப்பட்டு இருந்த SUV ரக காருக்குள் 34 வயது மதிக்கத்தக்க ஆடவர் இறந்த கிடந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் விரைந்த போது, அந்த காரின் இயந்திரம் செயலாக்கத்தில் இருந்தது. அந்த நபர் சுயநினைவு இழந்த நிலையில் காருக்குள் கிடந்தார்.
பூட்டப்பட்டிருந்த காரின் கதவு திறக்கப்பட்டு, மருத்துவ உதவியாளர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டதில் அந்நபர் இறந்து விட்டது என்று உறுதி செய்யப்பட்டது என்று தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அந்த நபர், உயிரை மாய்த்துக்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.








