Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மிகப்பெரிய தவறு செய்து விட்டனர்
தற்போதைய செய்திகள்

மிகப்பெரிய தவறு செய்து விட்டனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 09-

மஇகா தேர்தலில் உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள போட்டியிட்ட டத்தொ T. மோகனை தோற்கடிக்க செய்தது மூலம் மஇகா பேராளர்கள் மிகப்பெரிய தவற்றை செய்து விட்டனர் என்று முன்னாள் தேசியத்தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் S. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தின் துடிப்புமிகுந்த தலைவர்கள் வரிசையில் T. மோகனும் ஒருவர் ஆவார். தேர்தலில் அவரை தோல்வியடைய செய்து இருப்பது மூலம் பேராளர்கள் தவறு இழைத்துள்ளனர் என்று டாக்டர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

மோகனின் தோல்வி, தம்மை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

டி..மோகன், இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர் ஆவார். குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தனது நிறைவான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

அது மட்டுமின்றி இந்திய இளைஞர்களை கால்பந்தாட்டத் துறையில் மேம்படுத்துவதில் தமது சொந்த முயற்சியில் மலேசிய இந்திய கால்பந்தாட்ட சங்கத்தை தோற்றுவித்த பெருமை மோகனையே சேரும் என்று சுப்பிரமணியம் குறிப்பிட்டார்

மலேசிய லீக் கால்பந்தாட்டப் போட்டியில் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் வாகை சூடு அளவிற்கு கால்பந்தாட்டத்தில் இந்திய இளையோர்களை மோகன் சிறக்க வைத்துள்ளார் என்று டாக்டர் சுப்பிரமணியம் புகழாரக் சூட்டினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்