Sep 28, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதி, போலீஸ் படைத் தலைவருக்கு சபா மாநிலத்தின் உயரிய விருது
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதி, போலீஸ் படைத் தலைவருக்கு சபா மாநிலத்தின் உயரிய விருது

Share:

சபா மாநில ஆளுநர் மூசா அமானின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்படும் மாநில விருதுகளில், தலைமை நீதிபதி வான் அகமது ஃபரிட் வான் சல்லேவுக்கு, அம்மாநிலத்தின் உயரிய விருதான “டத்தோ ஸ்ரீ பாங்லிமா” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மூன்று பேருக்கு வழங்கப்பட்ட, “ஸ்ரீ பாங்லிமா டர்ஜா கினாபாலு” விருதுகளில் வான் ஃபரிட் ஒருவர்.

மற்ற இருவர் மலேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் இஸ்மாயில் மற்றும் தொழிலதிபர் அப்துல் ஃபரிஷ் அப்துல் ரஷித் ஆவர்.

இவ்வாண்டுக்கான மாநில விருதுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெறும் மொத்தம் 1,026 பேரின் பட்டியலில் இவர்களே முன்னிலையில் உள்ளனர்.

மேலும், இந்த மாநில விருதுகளைப் பெறுபவர்களில் மலேசிய போலீஸ் படையின் செயலாளர் அப்துல் ரஹ்மான் காசிம், ஆளுநரின் தனிச்செயலாளர் இசருடின் ஜலாலுடின், சபா இஸ்லாமிய விவகாரங்கள் துறை இயக்குநர் அவாங் ஜூரி அவாங் தாஹிர் மற்றும் சபா மின்சார நிறுவனம் நிறுவனத் தலைவர் சாதியா அஜீஸ் ஆகியோரும் அடங்குவர்.

Related News