Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் பொதுக்கூட்டம்
தற்போதைய செய்திகள்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் பொதுக்கூட்டம்

Share:

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தொடர்ந்து அதன் உறுப்பினர்களுக்குப் பல்வேறு நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி வருவதாக அதன் நிர்வாக தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம் கூறினார்.
நாட்டில் ஒரு முன்னுதாரணமான கூட்டுறவு கழகமாக திகழும் இந்த தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை ஒரு எடுத்துக்காட்டான கூட்டறவு சங்கமாக அரசாங்கமே புகழாரம் சூட்டி வருவதற்கு அதன் நிர்வாக திறனும் அங்கத்தினர்கள் ஒத்துழைப்புமே காரணமாகும் என்று டான்ஸ்ரீ சோமசுந்தரம் குறிப்பிட்டார்.
அத்துடன் அங்கத்தினர்கள் நலத்திட்டமாக கல்வி கடனுதவி, துன் சம்பந்தன் உபகார சம்பளம், எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான ஊக்குவிப்பு அன்பளிப்பு, சிறு தொழில் கடனுதவி, வீடு வாங்க கடன், அங்கத்தினர் மருத்துவ உதவி, இருதய அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, மூத்த அங்கத்தினருக்கு உதவி நிதி மற்றும் பல்வேறு உதவிகளை கூட்டுறவு சங்கம் வழங்கி வருவதாக அவர் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் நடைபெற்ற 56 ஆவது பொதுக் கூட்ட பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது டான்ஸ்ரீ சோமசுந்தரம் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான லாப ஈவாக அங்கத்தினர்களுக்கு 8 விழுக்காடு வழங்கப்படுவதாக டான்ஸ்ரீ .சோமசுந்தரம் அறிவித்தார்
அத்துடன் தற்போது புதிய அங்கத்தினர் பதிவு எடுக்கப் படுவதில்லை என்பதோடு அங்கத்தினர்கள் முதலீடு செய்ய தற்போது நிறுத்தம் செய்யப் பட்டிருப்பதாக டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம் கூறினார்.
அப்படி முதலீடு செய்யும் பணத்தை லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கான திட்டம் தற்போது திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இப் பொதுக்கூட்டம், நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன், தலைமை நிர்வாகி டத்தோ எஸ். கிளிரத்னராஜ் மற்றும் வாரிய இயக்குனர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 400 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related News