புத்ராஜெயா, ஜனவரி.08-
மலேசியர்களுக்கான புதிய வடிவமைப்பிலான அனைத்துலக கடப்பிதழ் ஆறு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இது அனைத்துலக தரத்திற்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று மைகாட் அடையாள அட்டையும் மேம்படுத்தப்படவிருக்கிறது. தற்போதைய அடையாள அட்டையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், அதிக பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய 'மை கார்டு' அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
போலி அடையாள அட்டைகள் பயன்பாட்டை முறியடிப்பது, தரவு பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் மலேசியர்களின் பரிமாற்றங்களை எளிதாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் கடப்பிதழைப் பொறுத்தவரை தற்போது உலகில் மிக நம்பகமான மூன்றவாது கடப்பிதழாக உள்ளது என்று கூறிய சைஃபுடின், அந்த நிலைப்பாட்டையும், நம்பிக்கையையின் அளவையும் பராமரிக்க, அதனை காலச் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய வடிவமைப்பில் புதுப்பிப்து அவசியமாகும் என்றார்.
இன்று புத்ராஜெயா, Dewan De’ Seri Endon, Puspanitapuri- யில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.
புதிய வடிவமைப்பு கடப்பிதழைப் பெறுவதற்கு மக்கள் அவசரம் காட்ட வேண்டியதில்லை. மாறாக, தங்கள் கடப்பிதழ் காலாவதியாகும் போது அதனை மாற்றிக் கோலாலம்பூர் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.








