Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது
தற்போதைய செய்திகள்

நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியின் பெயர் இன்று அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படாததை அடுத்து தலைமை நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது.

இன்று நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு புதிய தலைமை நீதிபதியின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது தொடர்பான எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆட்சியாளர்கள் மாநாட்டில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதே தவிர தலைமை நீதிபதி நியமனம் குறித்து எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Related News