May 21, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மாமன்னருக்கு பெரிக்காத்தான் நேஷனல் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குற்றவியல் சட்டம் 500 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

J-Kom எனப்படும் சமூக தொடர்புத்துறை உயர் நிலை அதிகாரி உட்பட இதுவரையில் நால்வரிடம் போலீசார் விசாரணை நடத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நடப்பு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு துபாய் நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் J-Kom அம்பலப்படுத்தியது தொடர்பாகவும் அந்த நால்வரிமும் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக Razarudin Husain குறிப்பிட்டார்.

Related News