கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி அரசாங்கம் நடைமுறைப்படுத்திய 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய முறை, இன்று ஆகஸ்ட் முதல் தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதாக ஸ்டீவன் சிம் தலைமையிலான மனித வள அமைச்சு அறிவித்துள்ளது.
5 ஊழியர்களுக்கும் குறைவாகக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டு மலேசிய தொழில் வகைப்பாடு தரநிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள நிபுணத்துவ தொழில் நடவடிக்கை சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும், இன்று ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து 1,700 குறைந்த பட்சம் ஊதியம் அமலுக்கு வருவதாக மனித வள அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு தேசிய சம்பள ஆலோசனை மன்றச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டதற்கு நிகராக இந்த 1,700 ரிங்கிட் சம்பள முறை உடனடியாக அமலுக்கு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பரீட்சார்த்த முறையில் குத்தகை அடிப்படையில் வேலை செய்து வரும் பணியாளர்களுக்கும் இந்த 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியம் அமலுக்கு வருவதாக மனித வள அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.








