May 24, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தின ஏற்பாடுகள் குறித்து மாட்சியை தங்கிய மான்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு இன்று விளக்கமளிக்கப்பட்டது.

2024 தேசிய தினம் மற்றும் மலேசியா தின கொண்டாட்டங்களுக்கான முதன்மைக் குழுவின் தலைவரான தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil, இஸ்தானா நெகாராவில் மாமன்னருக்கு இந்த விளக்கத்தை வழங்கியதாக சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமது பவுஸி முகமது இசாவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

2024ஆம் ஆண்டிற்கான தேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி டத்தாரான் புத்ராஜெயாவில் மிக கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

Related News