Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தடுத்து வைக்கப்பட்டவர்களில் இருவர் தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

தடுத்து வைக்கப்பட்டவர்களில் இருவர் தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.15-

நாட்டின் தென் பகுதியில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள், தங்களின் உண்மையான செயல்பாட்டை மறைப்பதற்குத் தங்களை ஊடகவிலாளர்கள் என்று அடையாளம் கூறியுள்ளனர் என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அந்த இருவரும் மலேசிய ஆயுதப்படையின் முன்னாள் வீரர்கள் ஆவார். தங்களின் கடத்தல் நடவடிக்கையை மறைப்பதற்கு அகப்பக்கச் செய்தி நிறுவனம் ஒன்றின் நிருபர்கள் என்ற முகமூடியை அணிந்து கொண்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

எனினும் எஸ்பிஆர்எம் மேற்கொண்ட சோதனையில் அந்த இருவரும் தங்கள் கும்பலின் உண்மையான தோற்றத்தை மறைப்பதற்கு ஊடகவியலாளர்கள் என்ற அடையாளத்துடன் தங்களின் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது அம்பலமாகியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News