May 22, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மாவின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்
தற்போதைய செய்திகள்

சொஸ்மாவின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்

Share:

ஜோகூர், மே 24-

ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஆடவனின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் தற்போது, 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான SOSMA-வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அந்த ஐவருக்கு எதிரான தடுப்புக்காவல் காலக்கெடு, இன்று மே 24 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு, SOSMA சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

இந்த ஐவரும் பிடிபட்ட போது, அவர்களின் வீட்டில் துப்பாக்கியை தயாரிக்கக்கூடிய ஒரு இரும்புக்குழாய் கண்டுபிடிக்கப்பட்டதால் 19 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்களை தடுத்து வைப்பதற்கு கூடுதல் சட்டமாக அபாயகர ஆயுத சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் விளக்கினார்.

Related News

சொஸ்மாவின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் | Thisaigal News