ஷா ஆலாம், ஜூலை.19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இடம்பெறுவது போன்ற ஒரு புதிய முதலீட்டுத் திட்டம் குறித்த விளம்பரம் முன்னணி காணொளித் தளங்களில் பரவி வருகிறது. 'AverexFlex 1.3 Ai' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தளம், குறைந்தபட்சம் 1,100 ரிங்கிட் முதலீடு செய்தால் வாரத்திற்கு 22,000 ரிங்கிட் வருமானம் ஈட்டலாம் என உறுதியளிப்பதாக விளம்பரம் வலம் வரும் செய்தியை சீனார் ஹரியான் செய்தி வெளியுட்டுள்ளது. மலேசிய நிதி அமைச்சும் இதில் ஈடுபட்டுள்ளதாக விளம்பரத்தில் வரும் தகவல்களை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்த நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.








