Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பெண் ஒருவர் மாண்டார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பெண் ஒருவர் மாண்டார்

Share:

முவார், பாரிட் ஜாவா, ஜாலான் புக்கிட் மோர்- ரில் மோட்டார் சைக்கிள் ஒன்று லாரியுடன் மோதியதில் 37 வயதுடைய நோர்ல்யானா ஷாரிஃப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரின் சகோதரன் பலத்த காயங்களுக்கு ஆளானார்.

நேற்று மதியம் 12:20 மணியளவில் ஆயெர் மனிஸ் - சிலிருந்து பாரிட் ஜாவா- விற்கு அப்பெண்ணும்,
27 வயதுடைய முஹமாட் கைருல் அம்ரி ஷாரிஃப் என்கிற அவரின் தம்பியும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது வேக கட்டுப்பாடின்றி எதிரே வந்த லாரியில் மோதியதாக முவார் ஓசிபிடி ராய்ஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் நோர்ல்யானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், முஹமாட் கைருல் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் ராய்ஸ் முக்லிஸ் கூறினார்.

Related News