கோலாலம்பூர், அக்டோபர்.17-
நாடெங்கிலும் பள்ளி மாணவர்களிடையே பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கான முக்கிய முடிவு ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை எடுக்கவுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பள்ளிகளில் நடைபெற்ற கொலை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உறுதியான மற்றும் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படவுள்ளது என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், முக்கிய அமைச்சர்களுடன் தான் கலந்தாலோசித்து வருவதாகவும், இன்று அமைச்சரவையில் அது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.