இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகம், இனி ரூபாய் நோட்டில் நடக்கும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
அதே வேளையில், இதற்கு முன்பு இருந்த நாணயப் பரிவர்த்தனை முறையும் தொடரும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்திய ரூபாய் மூலம், சர்வதேச பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்குக் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசெவ்ட் பேங் ஒஃ இந்தியா அனுமதி வழங்கியது தொடர்ந்து, அடுத்தகட்ட முயற்சியாக இந்தியா-மலேசியா இடையிலான வர்த்தகத்தை ரூபாய் நோட்டில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது உலகளாவிய நிலையில் இந்தியாவின் வர்த்தகங்கள் ரூபாய் நோட்டில் நடைபெறுவதை ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதாக இந்தியத் தூதரகம் தமது அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்


