Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஐந்து போலீஸ்காரர்கள் உட்பட அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

ஐந்து போலீஸ்காரர்கள் உட்பட அறுவர் கைது

Share:

கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஐவர் போலீஸ்காரர்கள் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் வாசியான பாதிக்கப்பட்டவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஐந்து போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
27 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ்காரர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி ஜாம் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

Related News