Oct 18, 2026
Thisaigal NewsYouTube

6 மாத கால உளவு நடவடிக்கையின் பலனாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
6 மாத கால உளவு நடவடிக்கையின் பலனாகும்

கோலாலம்பூர், செப்டம்பர் 14-

Global Ikhwan Service and Business Holding நிறுவனத்துடன் தொடர்பு படுத்தப்பட்ட 20 சமூக நல இல்லங்களில் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்பட்டதாக கூறப்படும் 402 பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவமானது, 6 மாத காலம் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் எதிரொலியாகும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரரிவித்துள்ளார்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் Global Ikhwan Service and Business Holding நிறுவனம் பற்றி தகவல்கள் பரவலாக வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து போலீஸ் துறை விசாரணை செய்து வந்ததாக ஐஜிபி விளக்கினார்.

அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்புகூட தவறான சமயப் போதனைகள் மீதான ஆய்வியல் மையத்தின் பிரதிநிதிகளை தாம் சந்தித்து பேசியதாக டான்ஸ்ரீ ரசாருதீன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →