கோலாலம்பூர், டிசம்பர்.18-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மும் அரச மலேசியப் போலீஸ் படையும் கூட்டாக இணைந்து தங்களின் ஊழல் எதிர்ப்புத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தவும், நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் இன்று இணக்கம் கண்டுள்ளன.
லஞ்ச ஒழிப்பு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க இரு அரசாங்க அமலாக்க ஏஜென்சிகளும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கூட்டுச் சோதனைகளை நடத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளன.
போலீஸ் படை துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை மற்றும் எஸ்பிஆர்எம் இயக்குநர் டத்தோ அகமட் நிஸாம் இஸ்மாயில் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இந்த கூட்டு ஒத்துழைப்புக்கு இணக்கம் காணப்பட்டது.
அரசுத் துறைகள் மற்றும் பொதுமக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகார்களை வெளிப்படையான முறையில் விசாரிக்கவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.








