Oct 23, 2026
Thisaigal NewsYouTube

அக். 27 முதல் வடகிழக்குப் பருவமழை: வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அக். 27 முதல் வடகிழக்குப் பருவமழை: வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் 2026-2027ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை வரும் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

இந்தப் பருவமழை 2027 மார்ச் மாதம் வரை நீடிக்கும் என மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் கூறியுள்ளார்.

நவம்பர் முதல் ஜனவரி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் மூன்று முதல் ஐந்து கட்டங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆறுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் தாழ்வான நிலப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் தொடர்ந்து கவனித்து, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →