Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சியினர் லஞ்ச ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சியினர் லஞ்ச ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்

Share:

பாஸ் கட்சியினர் லஞ்ச ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வருவதாக பா கட்சியின் தலைவரும், மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தெரிவித்தார். இந்த நடப்பு காலத்தில் அரசியல் தலைவர்களும் மக்களும் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டதால் அவர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபடுத்திக் கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

பக்காத்தான் ஹரப்பான், லஞ்ச ஊழலுலில் தொடர்புள்ள தலைவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்து கின்றது எனவும் எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலின் போது, முன்னாள் பாஸ் கட்சி தலைவர் அமரர் நிக் அப்துல் அசிஸ் கூறியது போல, சட்டை கொடுத்தால் போட்டுக் கொள்ளுங்கள், பணம் கொடுத்தால் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஓட்டை மட்டும் பாஸ் கட்சிக்குப் போடுங்கள் என்பது போல கிளந்தான் மக்கள் பாஸ் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என ஹடி அவாங் தெரிவித்தார்.

Related News