Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்து ஆராயப்படும்
தற்போதைய செய்திகள்

பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்து ஆராயப்படும்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.20-

மாணவர் மற்றும் சிறார்களை உட்படுத்திய பகடிவதை தொடர்பான வழக்குகளைச் செவிமடுக்க நடுவர் மன்றத்தை உருவாக்க வலியுறுத்தும் பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான அவசியத்தை அரசாங்கம் ஆராயவிருக்கிறது.

தற்போது எந்தவொரு சட்டத்திலும் பகடிவதை தொடர்பான தெளிவான அர்த்தமோ அல்லது தண்டனையோ இடம் பெறவில்லை என்று சட்டத்துறை சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.

சட்டத்தில் பகடிவதை என்ற வார்த்தை பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு, இடம் பெறாததால், நியாயப்படி கூறினால், செக்‌ஷன் 507ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொண்டதில் ஓரளவு மனநிறைவு கொள்ள முடிகிறது என்று அஸாலினா தெரிவித்தார்.

இதனிடையே பகடிவதை வழக்குகளைக் கையாளுவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட நடுவர் மன்றம் குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

Related News