Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஜி.எம் கிள்ளான் மொத்த வியாபார மையத்தின் தீபாவளி விற்பனை
தற்போதைய செய்திகள்

ஜி.எம் கிள்ளான் மொத்த வியாபார மையத்தின் தீபாவளி விற்பனை

Share:

தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள வேளையில், தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான பொருள்களை வாங்குவதற்கு வார இறுதி விடுமுறைகளில் ஜிம்.கிள்ளான் மொத்த விலை வியாபார மையத்திற்குப் படையெடுக்கும் இந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஓரிட மையமாக விளங்கிடும் ஜிம்.கிள்ளான், எல்லா நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் விதைத்து வருகிறது.

ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் வாங்கக்கூடிய மையமாக ஜிம்.கிள்ளான் அமைந்திருப்பதால் தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிடும் மையமாக இந்த பேரங்காடியையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர் என்கிறார் ஜிம்.கிள்ளான் மொத்த வணிக மையத்தின் விளம்பரத் தொடர்புத்துறை மூத்த நிர்வாகி நோர்சுஹைதா பிந்தி ஓத்மான்.

இந்த விழாக்காலத்தில் திரைச்சீலைகள், மேசை விரிப்புகள், குஷன் உறைகள், கம்பளங்கள், அலங்காரச் செடிகள் உள்ளிட்ட பல்வேறான அலங்காரப் பொருள்களை மக்கள் ஜிம்.கிள்ளான் கில் விரும்பி வாங்குகின்றனர். அவை மட்டுமின்றி பொட்டலங்களில் அடைக்கப்பட்ட முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை விரும்பி தேர்வு செய்வதுடன், கைக் கடிகாரம், மோதிரம், சங்கிலி போன்ற பல அலங்காரப் பொருள்களையும் தீபாவளிக்கு அணிந்து மகிழ அவர்கள் வாங்குகின்றனர்.
அதிகப் பொருள்களை வாங்கினால் அதிகப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டுக்கு ஏற்ப அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கிட தங்களுக்கு விருப்பமான வியாபார மையமாக மக்கள் ஜிம்.கிள்ளான் வணிக மையத்தை நாடி வருகின்றனர் என்று நோர்சுஹைதா ஓத்மான் கூறுகிறார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு