Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய முகங்கள் !
தற்போதைய செய்திகள்

அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய முகங்கள் !

Share:

அமைச்சரவை சீரமைப்புக்குப் பிறகு இன்று காலை 9.30 மணி அளவில் சில புதிய முகங்களோடு சந்திப்புக் கூட்டம் தொடங்கியது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் தலைமை ஏற்றிருக்கும் மடாணி அரசாங்கத்தின் இந்தப் புதிய அமைச்சரவையில் 2வது
நிதி அமைச்சராக டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்ஸா அசிசான்,
இலக்கவியல் அமைச்சராக கோபின் சிங் டியொ
தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சராக டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல்கானி
சுகாதார அமைச்சராக டத்தோ ஶ்ரீ டாக்டர் சிசுல்கிஃப்லி அஹ்மாட்
மனிதவள அமைச்சராக ஸ்தீவன் சிம் சீ கியோங் ஆகியோர் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட புதுமுக அமைச்சர்கள் ஆவர்.

நியமிக்கப்பட்ட அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் தங்களின் பணியை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.

28 பேராக இருந்த ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சர்கள் எண்ணிக்கை தற்போது 31 ஆக விரிவடைந்துள்ள நிலையில் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 27 இல் இருந்து 29 ஆக அதிகரித்துள்ளது.

Related News