கோலாலம்பூர், செப்டம்பர்.14-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவரது அரசியல் செயலாளர் டத்தோ அனுவார் முகமட் யூனோஸ் ஆகியோருடன் தொடர்புடைய வழக்கில், விசாரணையின் முழுமையான அறிக்கை சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செப்டம்பர் 12-ஆம் தேதி பெறப்பட்டதாக அவ்வலுவலகம் இன்று உறுதிப்படுத்தியது.
மேலும், குற்றவியல் வழக்கு தொடர்வது குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்பு, இந்த அறிக்கையை விரிவாக ஆய்வு செய்யப் போவதாக அது தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உரிமை கோராததால், 170 மில்லியன் ரிங்கிட் அரசாங்கத்தின் சொத்தாக அதிகாரப்படியாக மாற்றப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி முன்பு தெரிவித்திருந்தார்.








