தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டின் நடைப்பாதையில் வெடிகுண்டை பயன்படுத்தி வெடிக்கச் செய்ததன் மூலம் அந்த அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியை அதிரவைத்ததாக நம்பப்படும் காதல் ஜோடியினருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
32 வயது உள்ளூர் ஆடவரும் ஓர் இந்தோனேசிய மாதுவான 38 வயதுடைய அவரின் காதலியும் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரையில் தடுப்புக்காவலில் வைப்பதற்கு பட்டர்வொர்த் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
இவ்விருவரும் இக்குற்றத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டர்வொர்த், தாமான் பண்டான் அடுக்குமாடி வீட்டில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த காதல் ஜோடியின் அடுக்குமாடி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒருவெடிப்பொருளையும் மீட்டுள்ளனர்.








