Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

ஜோகூர் பாரு, மே.28-

கடந்த வாரம் ஜோகூர் பாருவிலும், பொந்தியானிலும் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இரண்டு கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

கடந்த மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜாலான் ஸ்கூடாய் லாமாவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையின் மூலம் 23 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பலதரப்பட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்ட வேளையில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூரைச் சேர்ந்த 6 ஆடவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்களும் பிடிபட்டதாக டத்தோ குமார் தெரிவித்தார்.

29 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எண்மரும் போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை