Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கோழி லோரியில் கார் மோதியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோழி லோரியில்  கார் மோதியது

ரோம்பின், செப்டம்பர் 08-

ரோம்பின் , ஜாலான் குவாந்தன் - செகாமட் சாலையின் 11 ஆவது கிலோ மீட்டாரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிர் இழந்தார்.

நேற்று சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ஆடவர், எதிர்திசையில் நுழைந்ததில் கோழிகளை எற்றி வந்த லோரியினால் மோதப்பட்டதாக ரோம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் நோ அஸ்மான் யூசோஃப் தெரிவித்தார்.

கோழி லோரிக்கு பின்னால் பின் தொடர்ந்து வந்த டிரெய்லர் லோரி, வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் இரு வாகனங்களையும் மோதியதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 38 வயதுடைய proton saga கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →