Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பிரதமருடன் மாமன்னர் மதிய உணவை எடுத்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமருடன் மாமன்னர் மதிய உணவை எடுத்தார்

கோலாலம்பூர், டிச. 9-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று மதிய உணவை உண்டு மகிழ்ந்தார்.

கோலாலம்பூர் விமான நிலையத்தின் அருகில் உள்ள பிரபல அசாம் பெடாஸ் உணவகத்தில் பிரதமர் அன்வாருடன் மாமன்னர் உணவை உட்கொண்ட காட்சிகளைக்கொண்ட புகைப்படங்களை தமது முகநூலில் பதிவிறக்கம் செய்துள்ளார். பிரதமருக்கு தனது கையாலேலே மாமன்னர் உணவை பரிமாறினார்.

இந்த மதிய உணவு உண்ட நிகழ்வில் மாமன்னரின் புதல்வரும், ஜோகூர் இடைக்கால சுல்தானுமான துங்கு மாக்கோத்தா இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.

முன்னதாக, இஸ்தானா பெலாங்கியில் மாமன்னருடன் டத்தோஸ்ரீ அன்வார் சந்திப்பு நடத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →