Oct 13, 2026
Thisaigal NewsYouTube

மியன்மார் பிரஜை கொலை: 4 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தாசெக் குளுகோர், மார்ச்.07-

பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செப்பாடு ஜெயாவில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மியன்மார் பிரஜை ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பில் 4 சந்தேகப் பேர்வழிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த நாசி கண்டார் உணவகத்தின் நிர்வாகியான 38 வயதுடைய அந்த மியன்மார் பிரஜையை , வெட்டுக் கத்தியை ஆயுதமாகக் கொண்ட முகமூடி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் உள்ளூரைச் சேர்ந்த நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான அந்த மியன்மார் பிரஜை உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த போது அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றதாக பூர்வாங்க புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி அனுவார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்