கோலாலம்பூர், செப்டம்பர்.25-
தன் வசம் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர், இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்த துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு எதிராக 3 நாள் தடுப்புக் காவல் காலக்கெடு, முடிவடைந்தைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாக புத்ராஜெயா போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார்.
அந்த எஸ்பிஆர்எம் அதிகாரிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்க விசாரணை அறிக்கை, பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் வைத்திருந்தததாகச் சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியை கடந்த செவ்வாய்க்கிழமை அவரின் வீட்டில் போலீசார் கைது செய்தனர்.








