சிகாமட், நவம்பர்.04-
ஜோகூர் மாநிலம், சிகாமட், ஜெமந்தா பகுதியில் நேற்று இரவு சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு 7.55 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சிகாமட்டில் இருந்து மேற்கே சுமார் 3கிமீ தொலைவிலும், 10கிமீ ஆழத்திலும் பதிவாகியுள்ளதாக மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், சிகாமட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.








