Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சகோதரரும், சகோதரியும் வீட்டில் இறந்து கிடந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சகோதரரும், சகோதரியும் வீட்டில் இறந்து கிடந்தனர்

கூலாய், நவ. 23-


மூத்த குடிமக்களான சகோதரரும், சகோதரியும் வீட்டில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவ்விருவரும் கடந்த இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளியேறாமல், கதவை தாளிட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

அத்துடன் அவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது குறித்து சந்தேகித்த அண்டை வீட்டுக்காரக்ள், போலீசுக்கு தகவல் அளித்ததைத்தொடர்ந்து அவ்விரு மூத்த குடிமக்களும் வீட்டிற்குள் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் ஜோகூர், கூலாய், தாமான் மேவாவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்ததுள்ளது.

நேற்று மாலையில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது.

மீட்புப்படையினர் வீட்டிற்குள், சென்று பார்த்த போது 65 மற்றும் 67 வயதுடைய அந்த இரு சகோதரர் மற்றம் சகோதரி இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். டான் செங் லீ தெரிவித்தார்.

அவ்விருவரின் மரணத்தில் சூது நிகழ்ந்திருப்பதாக எந்தவொரு அறிகுறியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களின் மரணத்தை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக சூப்ரிண்ட். டான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →