Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மனிதவள அமைச்சுக்குப் புதிய தலைமை செயலாளர்
தற்போதைய செய்திகள்

மனிதவள அமைச்சுக்குப் புதிய தலைமை செயலாளர்

Share:

அமைச்சர் வி.சிவக்குமார் தலைமையிலான மனித வள அமைச்சின் புதிய தலைமை செயலாளராக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸைனி உஜாங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நியமனத்தை அரசாங்க தலைமை செயலாளர் டான் ஶ்ரீ முகமட் சுகி அலி இன்று அறிவித்துள்ளார்.

58 வயதான ஸைனி உஜாங் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், ரசாயன பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.

பிரிடனில், நியூ காஸ்தல் பல்கலைக்கழகத்தில் பொறியியல், சுற்றுச்சூழல் துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.|

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1988 ஆம் ஆண்டு தமது பணியைத் தொடங்கிய ஸைனி உஜாங், 2011 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, தூதரக நிர்வாகத் துறையில் உயர் பொறுப்பை ஏற்கத்தொடங்கினார்.

Related News