இளையோர்கள் மத்தியில் அதிகரித்து வரும் திவாலானவர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் 5,695 இளைஞர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்ட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். இவர்களில் 25 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய 419 பேர் புதியதாக வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ள வேளையில் அவர்கள் திவாலானவர்களாக பிரகடன்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் 25 வயதுக்கும் கீழ்பட்டவர்கள் அதிகளவில் திவலானவர்களாக அறிவிக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இளையோர்கள் மத்தியில் திவால் சம்பவங்களை தடுக்க அவர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தில் அமைச்சு இருப்பதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.








