ஈப்போ, செப்டம்பர்.23-
கடந்த மே மாதம் பேரா மாநில போலீஸ் தலைவரை நோக்கி, குரலை உயர்த்திப் பேசி, அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
37 வயது அபாங் ஃபிக்ரி அபாங் முகமட் தௌஃபிக் என்ற அந்த நபர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 7 நாள் சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் முகமட் ஹாரித் முகமட் மஸ்லான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த மே 26 ஆ ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் மாநில போலீஸ் தலைவரின் அலுலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த நபர் போலீஸ் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.








